30 டிசம்பர், 2010

உன் பிறந்தநாள்

எப்படா இந்த கடிகார முள் நகரும் என்று
பன்னிரண்டு மணி அடிக்கும் வரை காத்திருந்து,
மெழுகுவர்த்தியோடு உன் அறையில் நுழைந்து,
மெல்லியதாய் உன்னை தட்டி எழுப்பி, உன் காதருகே
மெல்ல 'happy birthday செல்லம்' என்று சொல்லி,
நீ ஆச்சர்யத்தில் புன்னகைக்கும் போது கேக் வெட்டசொல்லி,
அந்த கேக்-கை உன் முகத்தில் பூசி விளையாடி,
விடிந்ததும் நீ குளிக்க போகும்போது குளியலறை கதவில் போட்ட
பழைய ஆடையை உருவி, தரமாட்டேன் என்று வம்பு பண்ணி,
அதற்க்கு பதில் நான் வாங்கிய மயில் கலர் புதுப்புடவையை கொடுத்து,
அதை நீ கட்டியவுடன் 'ஐயோ chancey இல்ல... தேவதை மாதிரி இருக்க'
என்று கூறி உன் கன்னம் சிவக்க வைத்து, அதில் ஒரு முத்தம் பதித்து,
பின்னர் உன்னை கோவிலுக்கு அழைத்துப்போய், அங்கே குருக்களிடம்
'ஐயரே, இன்னிக்கு எம்பொண்டாட்டிக்கு பொறந்த நாள்,
நூறு வருஷம் தீர்க்க சுமங்கலி பவ-னு மந்திரம் சொல்லுங்கோ' என்று சொல்லி,
'இருடா, நூறு வருஷம் உன்னை பாடாப்படுத்த போறேன் பாரு',
என்று சொல்லிக்கொண்டே நீ என் பைக்கில் ஏறி என்னை கட்டிக்கொண்டு,
உன் ஆசைப்படி முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் விருந்தளித்து,
பின்னர் உன் கன்னம் ஒட்டிக்கொண்டே கடற்கரையில் காற்று வாங்கி,
உனக்கு ஓரிரு மொக்கை கவிதையும் கரடி பொம்மையும் பரிசளித்து,
வீடு சேர்ந்ததும் நீ என் தோள் சாய்ந்து 'நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா,
Thank You' என்று நீ சொல்லும்போது, 'ச்சீ, Thank You எல்லாம் சொல்லாத லூசு',
என்று உன் தலையில் செல்லமாய் தட்டி, உன்னை இறுக்க கட்டிக்கொண்டு.......
..........
என...... ......... இவை அத்தனையும் தொலைபேசியிலேயே வாழவேண்டிய கட்டாயத்தில்
நீயும் நானும்..... " இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! "

--நாச்சு

17 டிசம்பர், 2010

உயிர்த்தல்

கிறுக்கல்கள் என நினைத்த வார்த்தை யாவும், நானும் ஒரு கவிதை தான் என முட்டி மோதி எழுகின்றன....
உளறல்கள் என ஒதுக்கிய பேச்சுக்கள் யாவும், நானும் ஒரு காதல் மொழி என உயிர்த்தெழுகின்றன ...
சத்தங்கள் என வெறுத்த ராகம் யாவும், நானும் ஒரு மெல்லிசை என துடித்தெழுகின்றன...
கோடுகள் என கசக்கிய காகிதம் யாவும், நானும் ஒரு ஓவியம் என மலர்ந்தெழுகின்றன...
இத்தனைக்கும் உயிர் கொடுத்துவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல் மெல்லியதாய் சிரிக்க எப்படி முடிகிறது உன்னால் மட்டும்?

-நாச்சு

08 டிசம்பர், 2010

டவுன் பஸ்

கருந்தேள் போல கருவிழியால கொட்டிப்புட்ட,
கருவாப்பய நெஞ்சு கெடந்து துடிக்குது புள்ள,
கன்னம் ரெண்டில் மயிலெறகா சீண்டிபுட்ட,
கிறுக்குப்பய கன்னம் இப்போ ஏங்குது புள்ள,
தோள் சாஞ்சு என் எடைய கொஞ்சம் கூட்டிபுட்ட,
சண்டிப்பய மனசு எனம்புரியாம தவிக்குது புள்ள,
நாளைக்கும் இதே பஸ்ஸுல தான் வருவேன்,
நீயும் வந்துரு என்னக்கொஞ்சம் அள்ளிக்கொள்ள....

- நாச்சு

01 நவம்பர், 2010

குட்டித்தூக்கம்

நீ என்னிடம் கோவித்துக்கொண்டு அந்த பக்கம் திரும்பி படுத்தாலும்
உன் மேல் செல்லமாய் கால் போட்டு தூங்குவேனே,
நீ நிதமும் காலையில் என் காதை திருகி எழுப்பினாலும்
பொய்யாய் ஒரு குட்டித்தூக்கம் போடுவேனே,
அதற்காகவாவது பெரியவனாகியும் உன் மடியில் படுத்துறங்க வேண்டும் அம்மா.

-- நாச்சு

நான் கடவுள்

நம் கடற்கரை இரவுகளில், நெருப்பாய் உன் தீண்டல் என்னை சுட,
பஞ்சபூதங்களும் சேர்ந்து தொழும் கடவுளாகிறேன்

-- நாச்சு

14 அக்டோபர், 2010

நியதியின் இயற்கை

கண்ணயரும் போது சின்ன கனவொன்று தோன்றுவது போல்
மென்மாலையில் செல்லக்குரலொன்று கேட்பது போல்
மனதில் நின்றதொரு ராகத்தை தன்னையறியாமல் முனுமுனுப்பது போல்
என்றோ பழகிய ரம்மியமான வாசனையொன்றை நுகர்வதை போல்
மழைச்சாரலும் குளிர்காற்றும் கலந்து மயிர்கூச்செறிய செய்வது போல் தான் காதலும்.
எதிர்பாரா நேரத்தில் துள்ளிக்கொண்டு நம் மனதை துளைத்து ஆட்டிப்படைக்கும்...
வரவேண்டிய பொழுதில் வரவேண்டியவர்களுக்கு வந்தே தீருவதுதான் இயற்கையின் நியதி !!

-- நாச்சு

ஓவிதை கவியம்

நினைத்த நொடியில் முகம் மலர வைக்கும் அவசரக்கவிதை நீ.
பார்த்த நொடியில் மெய் சிலிர்க்க வைக்கும் துறுதுறு ஓவியம் நீ.

-- நாச்சு

கோமாளிகள் உலகம்

அம்மாவை பிரிந்து,
நண்பர்கள் தொலைத்து,
உறவுகள் மறந்து,
அறுசுவை உணவு விட்டு,
ட்ரெக்கிங் துறந்து,
பைக்கிங் மறந்து,
கனவுகள் கலைத்து,
தாய்நாட்டை விலகி.....
காசு சம்பாரிக்க போனானாம் நாகரிக கோமாளி....

-- நாச்சு

ஓர் உறவு

எத்தனை கோபமாய் சண்டை போட்டாலும்
எத்தனை விஷயங்களை மறைத்தாலும்
பிடிக்காதது போல் எத்தனை முறை நடந்துகொண்டாலும்
புரியாமல் எத்தனை முறை வாதாடினாலும்
பின்னாளில் மனம் வருந்தி, ஏங்கி தவிக்கும் ஒரே உறவு
தந்தை - பிள்ளை உறவு !!!

-- நாச்சு

ஆயக்கலைகள் அறுபத்தி ஐந்து

ஆயக்கலையில் அறுபத்தைந்தாம் கலையாய் சிரிப்பை ரசிக்கும் கலையை சேர்க்கக்கோரி மனு வைத்துள்ளேன்.
சேர்த்து விட்டால், அதில் நான் ஜெயித்த பெருமை, என்றும் உன்னையே சேரும்

-- நாச்சு

கண்ணீர் பரிசு

நான் உனக்காக பத்து பதினைந்து வளையல்கள், ஒரு ஜோடி கொலுசு, நான்கைந்து கரடி பொம்மைகள், ஏழெட்டு கிரீட்டிங் கார்டுகள் வாங்கி வந்த போதும், அதை பார்த்து சந்தோஷ கண்ணீர் விட்டு, "நீ எனக்காக ஆசையா எவ்ளோ வாங்கி இருக்க, ஆனா என்கிட்ட அவ்ளோ காசு இல்லை. அதுனால உனக்கு இந்த சாக்லேட்டும், நம்ம பேரு போட்ட கீசெயினும் தாண்டா வாங்கினேன். எனக்கு ஒரே கஷ்டமா இருக்குடா" என்று சொன்னபோது பளார் என்று அறைந்தது போலிருந்தது.

"அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை செல்லம், உன்னை பாத்ததே பெரிய சந்தோஷம், இதுக்கு மேல நம்ம பேரு போட்ட கீசெயின் வேற. இது போதாதா எனக்கு", என்று சொல்லி உன்னை பொத்தாம்பொதுவாய் சமாதான படுத்திவிட்டு, "உன் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல், இத்தனை பரிசுப்பொருள் வாங்கி உன்னை காயப்படுத்தி விட்டேன்" என்று எனக்குள் நினைத்துக்கொண்டு, விழுகவந்த ஒரு சொட்டு கண்ணீர்த்துளியை கண்ணாலே முழுங்கிக்கொண்டு, தொண்டை அடைக்க உன்னை பார்த்து வெறுமையாய் பல்லிளித்தேன்.

-- நாச்சு

Rain of Advices..... Needed !!

Advice.... Advice..... Advice.....
ச்சே...... எதுக்கெடுத்தாலும் Advice.....
காலைல சீக்கிரம் எந்திரி,
exam-க்கு ஒழுங்கா படி,
டிபன் சாப்பிடாம exam-க்கு போகாத,
exam-ல bit அடிக்காத,
class-ல bubblegum சாப்பிடாத,
கெட்ட வார்த்தை பேசாத,
பஸ் ஸ்டாப்-ல அந்த பொண்ணு பக்கத்துல உக்காந்து பேசாத,
காலேஜ் பஸ்-ல தொங்கிகிட்டு போகாத,
lab, practice exam எல்லாத்தையும் கட் அடிச்சுட்டு சினிமா-க்கு போகாத,
இப்டி ஊரு சுத்தி சுத்தி, படிக்காம arears வைக்காத,
arears exam-க்கு படிக்காம phone பேசிக்கிட்டு இருக்காத,
college படிக்கும் போதே cellphone use பண்ணாத,
இப்படி ragging பண்ணி suspend ஆகாத,
எங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சுகிட்டு அந்த பொண்ணு கூட ஊரு சுத்தாத,
semester holidays-ல cricket cricket-னு இருக்காம எதாவது useful-ஆ training attend பண்ணு,
எப்போவாவது ஒரு தடவை கோவிலுக்கு போ,
campus interview-க்கு படிக்காம beach -ல என்ன அரட்டை வேண்டிகிடக்கு,
friends, friends-னு friends-க்கு குடுக்குற மரியாதை parents-க்கும் teachers-க்கும் குடு,
இப்படி நடுரோட்ல பொறுக்கி மாதிரி சண்டை போட்டு மானத்தை வாங்காத,
bike-ஐ வேகமா ஓட்டாத.... ஏற்கனவே ஆன ஒரு கொடுரூமான accident போதும்,
அப்ப்ப்ப்ப்பா..... எதுக்கெடுத்தாலும் advice..... தினம் தினம் advice,
இந்த advice-க்கு எல்லாம் ஒரு முடிவே இல்லையா ஆண்டவா-னு நெனச்சது உண்டு,
ஆனா இப்படி ஒரேடியாய் முடிவு வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை,
இப்போவெல்லாம் life-ல tough times வரும்போது advice பண்ண நீங்க இல்லையே-னுதான் நினைக்கிறேன் அப்பா !!
நீங்க பண்ண ஒவ்வொரு advice-ம் எவ்ளோ அர்த்தமுள்ளதுன்னு இப்போ feel பண்றேன் அப்பா.... Too Late Now !!!

-- நாச்சு

காலம் எனும் அவலம்

இறந்தகால நினைவுகளில் வாழ்கிறேன், வாழும்கால நினைவுகளை இறக்கவிட்டு

-- நாச்சு

Dedication to Tamil Annai & AR Rahman for Tamil National Anthem

உணர்ச்சி ததும்ப வைக்கும் எங்கள் தமிழ்,
கண்கள் கலங்க வைக்கும் எங்கள் தமிழ்,
குரல் தழுதழுக்க வைக்கும் எங்கள் தமிழ்,
ஆசை பொங்க வைக்கும் எங்கள் தமிழ்....

தமிழன்னைக்கு ஒரு தமிழ் தேசிய கீதமாம், மறத்தமிழன் இசையில்.....
வரவேற்கிறோம் தமிழ் தேசிய கீதத்தை, வணங்குகிறோம் தமிழன்னையின் பாதத்தை.....
வழிமொழிகிறோம்... 'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா'.... எனும் நாமத்தை....

-- நாச்சு

- தமிழன் நாச்சு

இமையாமை !!

புகைப்படத்தில் கூட உன் கண்களை கண்டுவிட்டால்,
என் கண்களை இமைக்க மறந்துவிடுகிறேன்.
நேரில் எத்தனை மணி நேரம் பார்ப்பேனோ...
பாவம் நீ !! உன் கண்களும் தான் !!!

-- நாச்சு

சில நொடிகள் ஆகிறது

உங்கள் பாசம் கிடைக்காமல் தவித்து சில வருடங்கள் ஆகிறது
உங்கள் அரவணைப்பை தவறவிட்டு சில காலம் ஆகிறது
உங்கள் முகம் மறந்து சில நாட்கள் ஆகிறது
உங்கள் புகைப்படம் பார்த்து சில மணி நேரம் ஆகிறது
கடைசியாய் உங்களுக்காக அழுது சில நொடிகள் ஆகிறது
தந்தையர் தினத்தில் வாழ்த்த வார்த்தைகள் இருந்தும், வழி இல்லாமல் போனது அப்பா
எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதித்தும்,
உங்களுக்காக ஒரு கைக்குட்டை கூட வாங்க முடியவில்லை அப்பா.... :(

-- நாச்சு

காண் கண்

பெண் என்பவள் யாதென தெரிந்தேன்
அவள் கண் என்ன செய்யுமென அறிந்தேன்
இருந்தும் விதி மாறாமல் தொடர்ந்தேன்
தெரிந்தும் தொடர்ந்ததனால் தொலைந்தேன் !

-- நாச்சு

களவாணி

விதவிதமாய் பார்க்கிறாய், அழகழகாய் சிரிக்கிறாய்

படபடவென கதைக்கிறாய், சிடுசிடுவென சிணுங்குகிறாய்

கண்ணாலே என் ஆணவம் கொல்கிறாய்

தன்னாலே எனை சிரிக்க வைக்கிறாய்

என்மேலே வந்து தவழ்கிறாய்

பின்னாலே என்னை கவர்கிறாய்

இதிலெல்லாம் உனை பிடித்திருந்தும்

உன் ஒரு செயல் பிடிக்கவே இல்லை,

என் மனதை மொத்தமாய் திருடாமல்

கொஞ்சம் கொஞ்சமாய் கொள்ளையடித்திருக்கலாம்.

- நாச்சு

என்ன பிடிக்கும்?

கதை பேசும் அந்தி மாலை,
கட்டியணைக்கும் விடியற்காலை,
காதலில் உருகும் நண்பகல்,
காமம் பெருகும் நடுநிசி.... என
கைப்பிடித்த கல்யாண நாள் முதல்
காணத்துடிக்கும் கடைசி நொடி வரை
என் நினைவுகளில் நீயே இருந்து
என் நாட்களை நீயே வாழ்ந்து
என்னை எனக்கே பிடிக்க வைத்துவிட்டாய்!!

-- நாச்சு