17 செப்டம்பர், 2016

சகி செய்த சதி

உன் இமைகள் பாவம்
இத்தனை நாள் பட்டாம்பூச்சி போல் சிறகடித்துவிட்டு
என்னைக் கண்ட முதல் நொடியில் உறைந்து விட்டது

என் இதையமும் பாவம்
இத்தனை நாள் ஒரே சீராக இயங்கிவிட்டு
உன் விழி உறைந்த நொடி முதல் அதிவேகத்தில் துடிக்கிறது

வேட்கை தணிவிக்க விழியிரண்டை அசைத்திடு
இதயம் சீராக்க
காதல்மொழி பேசிடு

அந்த சதிக்கு செய்த சதியால் அவள் சதியில் விழுந்தது போல்
என் விதிக்கு உன் விழி செய்த சதியால் காதலில் விழுந்துவிட்டேன் !!

கருத்துகள் இல்லை: