01 நவம்பர், 2010

குட்டித்தூக்கம்

நீ என்னிடம் கோவித்துக்கொண்டு அந்த பக்கம் திரும்பி படுத்தாலும்
உன் மேல் செல்லமாய் கால் போட்டு தூங்குவேனே,
நீ நிதமும் காலையில் என் காதை திருகி எழுப்பினாலும்
பொய்யாய் ஒரு குட்டித்தூக்கம் போடுவேனே,
அதற்காகவாவது பெரியவனாகியும் உன் மடியில் படுத்துறங்க வேண்டும் அம்மா.

-- நாச்சு

1 கருத்து:

Nellai Muthu சொன்னது…

எத்துனை வயதனாலும் அம்மாவின் மடியில் சாய்ந்து உறங்குவதில் உள்ள சுகமே தனி..... :)