தை தை தையென நடனமாடினள்
தத்தை மொழி பேசினள்
“உழவும் தெய்வம் விதைத்த‘தை’
அவர் மனையாள் அறுத்த‘தை’
பஞ்சபூதங்கள் காத்த‘தை’
வணிகர் பலர் தருவித்த‘தை’
தந்நிகரில்லா தந்தை கொணர்ந்த‘தை’
அன்பேயுருவான அன்னை சமைத்தாளாம் அதில்
தத்தைக்கு வெண்பொங்கலென பெயராம்
தங்கைக்கு சர்க்கரைப்பொங்கலென பெயராம்
தமையனோ கட்டிகரும்பென இனிப்பானாம்
தம்பியோ அத்தனையும் தின்றுமுடிப்பானாம்”
என தத்தை மொழி பேசினள்
தை தை தையென நடனமாடினள்
தையெனும் திருமகள்
தமிழர்களின் பொன்மகள் !!
பாவாக்கம் – Nachu Hosanna
தத்தை மொழி பேசினள்
“உழவும் தெய்வம் விதைத்த‘தை’
அவர் மனையாள் அறுத்த‘தை’
பஞ்சபூதங்கள் காத்த‘தை’
வணிகர் பலர் தருவித்த‘தை’
தந்நிகரில்லா தந்தை கொணர்ந்த‘தை’
அன்பேயுருவான அன்னை சமைத்தாளாம் அதில்
தத்தைக்கு வெண்பொங்கலென பெயராம்
தங்கைக்கு சர்க்கரைப்பொங்கலென பெயராம்
தமையனோ கட்டிகரும்பென இனிப்பானாம்
தம்பியோ அத்தனையும் தின்றுமுடிப்பானாம்”
என தத்தை மொழி பேசினள்
தை தை தையென நடனமாடினள்
தையெனும் திருமகள்
தமிழர்களின் பொன்மகள் !!
பாவாக்கம் – Nachu Hosanna
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக