11 மே, 2024

நீயே எங்கள் தாயே !!

அழகே அமுதே என உனை ஆராதனை செய்வர் கவிஞர் பலர்

ஆனால் அன்பிற்கும் அறிவிற்கும் அடிப்படையே நீயன்றோ !!


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே எனப் புகழ்வர் புலவர் பலர்

ஆனால் காற்றில் கலந்து கேட்டபொழுதெல்லாம் கண்கலங்க வைக்கும் காரிகையே நீயன்றோ !!


தீஞ்சுவையே தேன்மொழியே என நினை நினைத்துருகுவர் அறிஞர் பலர்

ஆனால் தம்மக்கள் யாவரும் தழைத்திட அருள்புரியும் தாயன்பே எங்கள் தமிழன்றோ !! 




- Dedicated to ETP (Emirates Tamizh Palli) Teachers and Teachers day event organisers. அமீரக தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கும் & அமீரக தமிழ்ப் பள்ளி ஆசிரியர் தின விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கும் சமர்ப்பணம்

கருத்துகள் இல்லை: