11 பிப்ரவரி, 2011

புலம்பல்

ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன் கணினிக்கு அடிமையாவதை நிறுத்திவிட வேண்டுமென்று...
ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன் இன்றோடு பேஸ்புக்-க்கு முழுக்கு போட வேண்டுமென்று...
வீடு திரும்பியும் ப்ராஜெக்ட்-டை கட்டிக்கொண்டு அழுவதை நிறுத்த வேண்டுமென்று...
வீணாக ச்சாட்டிங் செய்து பொழுதை கழிப்பதை அறவே நிறுத்த வேண்டுமென்று...

மனைவிக்கு கோவம் வருகிறது நான் அவள் இருக்கும் போது கணினியே கதி என்று கிடக்கிறேன் என்று...
அம்மாவுக்கு கோவம் வருகிறது நான் அவர்களோடு கோயிலுக்கு செல்லவில்லை என்று...
மகளுக்கு கோவம் வருகிறது நான் அவளோடு கொஞ்சவும் விளையாடவும் வரவில்லை என்று...
மேலாளருக்கு கோவம் வருகிறது நான் இன்னும் அதிகம் வேலை செய்யவில்லை என்று...

நானும் என்ன தான் செய்வேன்...
எனக்கு சோறு போடும் கடவுள் இந்த கணினி தானே...
என் நண்பர்கள் எனக்கு தெரிவதே பேஸ்புக்கின் உருவில் தானே...
என் உறவினர்களோடு நான் உறவாடுவதே இந்த ச்சாட்டிங்கில் தானே...
என் விளையாட்டும் உடற்பயிர்ச்சியும் கூட இந்த பாழாய்ப்போன கணினி தானே...

கனவில் கூட பள்ளிப்பருவத்தை போல ஸ்பைடர்மேன்-னும் சூப்பர்மேன்-னும் வருவதில்லை
அதில் வருவது கூட மீட்டிங்-கில் கத்தும் கஸ்டமர்-ரும் ப்ராஜெக்ட் மேனேஜர்-ரும் தான்...
இன்னும் இந்த கணினி என் தாயாக, மனைவியாக, மகளாக மட்டும் தான் மாறவில்லை,
நண்பன் திருமணத்தை விட முக்கியமானதாக திணிக்கப்பட்டது ப்ராஜெக்ட் டெட்லைன் தான்...

இப்படி கை வலிக்க வலிக்க சம்பாதிப்பது கூட ஒரு வாய் உணவை ரசித்து சாப்பிட இல்லை
அந்த லோன் இந்த லோன் என்று அடிமையாகி கிடப்பதில் இருந்து மீளத்தான்...
இது தெரிந்தும் 'எக்கச்சக்க பணத்தில் கொழிக்கும் சாப்ட்வேர் இஞ்சினியர்கள்' என்று தான் பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள்,
என்ன புலம்பி என்ன பயன், இதையும் பேஸ்புக் ஸ்டேடஸ்-ஸில் போட்டுவிட்டு ஸ்டேடஸ் மீட்டிங்-குக்கு போக வேண்டியது தான் !!

-நாச்சு

6 கருத்துகள்:

Nellai Muthu சொன்னது…

Nice one Naachu

jtk சொன்னது…

Excellent nachu,

Is it U, i cant believe this.
Any have my best wishes.
regards,
-thiru

jtk சொன்னது…

Excellent nachu,

I cant believe that u have written this.
Any have all the best

regards,
-thiru

balaji damodaran சொன்னது…

Realistic poem!!!!
Gagaga bo..

balaji damodaran சொன்னது…

Realistic poem sir!!!!
Gagaga po (actor vadivel style)

Balaji சொன்னது…

Realistic poem sir!!!!
Gagaga po....