ஒவ்வொரு தமிழ் வார்த்தையும் ஏதாவதொரு வார்த்தையில் இருந்து தான் மருவி வந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், "காதல்" எனும் வார்த்தைக்கான பெயர்க்காரணத்தை கண்டறிய, ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினேன்....
காதலை சொல்லிவிட்டலோ, அல்லது சொல்லப்பட்ட காதல் மறுக்கப்பட்டாலோ, அந்த "காதல்" நம்மை அடையும் வரை "காத்திருப்பதால்" தானோ என்னவோ, "காத்திருத்தல்" மருவி "காத்தல்" ஆகி, மேலும் மருவி "காதல்" ஆகியிருக்குமோ என்று தோன்றியது !!
காதலை சொல்லி, அது கிடைத்தும் விட்டால், அந்த காதலை வாழும் காலம் வரை நாம் "காக்க" துடிப்பதாலும், காதலிப்பவரை கண் கலங்காமல் காலம் முழுதும் நாம் "காப்பதாலும்", "காத்தல்" என்ற வார்த்தை மருவி "காதல்" ஆகியிருக்குமோ என்றும் தோன்றியது !!
பெயர்க்காரணம் எதுவாயினும், அந்த வார்த்தை மட்டும் அவ்வளவு அழகு, அதை அனுபவிப்பவர்கள் அழகோ அழகு, அதை ரசிப்பவர்கள் கொள்ளை அழகு!! உலகம் காதல் மயமாகட்டும், உறவுகள் தித்திப்பாகட்டும்... "இனிய காதலர் தின நாள் வாழ்த்துக்கள்" !!
-- நாச்சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக