29 செப்டம்பர், 2015

பின்னிரவில் ஒரு சிரிப்பொலி

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது கேட்டது அந்தக் கள்ளச் சிரிப்பொலி

இந்த அதிகாலை நேரத்தில் இத்தனை அழகாய் சிரித்தது யாரென இருட்டில் தேடினேன்

சிரித்தது அவள் தான் என தன் முதல் கற்றை ஒளிக்கீற்றால் காட்டிக்கொடுத்தான் கதிரவன்

கனவில் எதையோ நினைத்துப் புன்முறுவல் புறிந்து கொண்டிருந்தாள் அவள்

குழந்தை உறக்கத்தில் சிரித்தால் இறைவன் பூ கொடுக்கின்றான் என்று அர்த்தமாம்

என்றோ ஒரு நாள் அம்மா சொன்னதை ஞாபகமூட்டியது என் செல்ல மகளின் சிரிப்பொலி

பெருக்கெடுத்த முத்த மழையை அடக்கி அவள் கனவு கெடாமல் ஓரிரு முத்தம் பொழிந்து உறங்கிப்போனேன்

மழலை பேச்சு மட்டுமே ஆனந்தமல்ல மழலை உறக்கமும் அதில் அந்த கள்ள நகைப்பும் பேரானந்தமே !!

- அப்பா 😊

கருத்துகள் இல்லை: