15 ஆகஸ்ட், 2017

மாலை நேரம்

மாலை நேரம்...

சில்லென்ற காற்றுடன் சிறுதூறல்...
உன்னழகில் மயங்கிய என் மனதில் பெருமழை...

புது மழையில் பூத்த பொன்மலராய் நீ...
அடாது மழையிலும் விடாது துரத்தும் தேனீயாய் நான்...

யாருக்கும் கேட்காத பாடலொன்று எனக்கு மட்டும் ரீங்காரமாய் கேட்கிறது...
அத்தனை அழகான இயற்கை எழில் நமக்கு மட்டும் ரம்மியமாய் காட்சி தருகிறது...

இந்த உலகம் இந்த நொடியிலே நிலைகுத்தி நின்று விடக்கூடாதா என்ற ஏக்கத்தில் ஏனோ நெஞ்சம் தவிக்கிறது !!!!

இனிய தேசம்

எம் தேசம் இந்திய தேசமடா
எங்கள் உயிரினில் கலந்த தேசமடா...

இங்கு எங்கும் எதிலும் வீசும் சுதந்திர வாசமடா...
இல்லாரையும் வாழவைக்கும் இனியதோர் தேசமடா....

தாய்மண் மீது கொண்டோம் அளவில்லா பாசமடா...
தார்மீக நெறிகளை உலகுக்கே பறைசாற்றிய தேசமடா...

எதிரிப்படை நெருங்கினாலும் செய்வோமதை நாசமடா...
ஏற்றப்பாதையில் வளர்ந்து வரும் எழுச்சி மிக்க தேசமடா...

ஏனோ அரசியல்வாதிகள் இங்கு சற்றே மோசமடா...
எனினும் என்றும் அழியா எங்கள் மண்மீதான நேசமடா...

வானோங்கு வாழ்க பாரதம் !! வளர்ந்தோங்கி வெல்க இந்தியன் என்னும் பெருமிதம் !!!

- பாவாக்கம்
நாச்சு