தமிழா.... மதம் வளர்க்கிறேன் என்ற பெயரில் ஏன் தமிழன்னையை கொல்லப்பார்க்கிறாய்
மதம் செழிக்க தமிழை மறந்து சமஸ்கிருதத்தின் பின்னால் ஏன் ஓடினாய்
மதம் வளர்க்க தமிழில் அரபியையும் உருதுவையும் கலந்து ஏன் பேசினாய்
மதம் பரப்ப தமிழை விடுத்து அன்னியன் கொணர்ந்த ஆங்கிலத்தை ஏன் நாடினாய்
மதம் செழிக்க தமிழை மறந்து சமஸ்கிருதத்தின் பின்னால் ஏன் ஓடினாய்
மதம் வளர்க்க தமிழில் அரபியையும் உருதுவையும் கலந்து ஏன் பேசினாய்
மதம் பரப்ப தமிழை விடுத்து அன்னியன் கொணர்ந்த ஆங்கிலத்தை ஏன் நாடினாய்
கடவுள் மொழிகளுக்கு அப்பாற்பட்டவர்
அவரை நாட நாம் வடமொழியையும்
அன்னிய மொழியையும் நாட வேண்டியதில்லை
தாய் தமிழில் வழிபட்டாலே இறைவன் செவிசாய்வான்
இந்த தமிழ்ப்புத்தாண்டில் உறுதி மொழியெடு
மதத்திலும் இசையிலும் மின்னஞ்சலிலும் கைப்பேசியிலும்
முகப்புத்தகத்திலும் எழுதுவதிலும் பேசுவதிலும் மற்ற எல்லா துறையிலும்
முடிந்தவரையில் தமிழை மட்டுமே பயன்படுத்துவேன் என்று உறுதியெடு
மதத்திலும் இசையிலும் மின்னஞ்சலிலும் கைப்பேசியிலும்
முகப்புத்தகத்திலும் எழுதுவதிலும் பேசுவதிலும் மற்ற எல்லா துறையிலும்
முடிந்தவரையில் தமிழை மட்டுமே பயன்படுத்துவேன் என்று உறுதியெடு
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்கச்சொல்வோம் உலகுக்கு !!
இனம் ஒன்றாக மொழி வென்றாக புது வேலை எடுப்போம் விடிவுக்கு !!
தமிழின் வெற்றிப்பாதையில் பிற மொழிகள் வந்தால் அவைகளை விருந்து வைப்போம் தமிழன்னைக்கு !!
-- கண்ணீர் மல்க வேண்டிக்கொள்ளும் ஒரு தமிழன் !!