20 செப்டம்பர், 2013

விழியழகில் வெற்றி

அனைவரின் கருவிழிகளும் வட்டமாகவே இருந்தாலும், 
அவளின் கண்களை உற்று கவனிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு தோன்றுவது 
"இந்த கருவிழிகள் மட்டும் எப்படி இத்தனை அருமையான வட்டமாக இருக்கிறதே" என்று.
ஒரு சில நொடிகளாவது ஆகும் என் கிறுக்குத்தனத்தை உணர்ந்து தன்னிலை அடைய !

கண்ணிமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டுமென விளையாடி கொண்டிருப்போம்
அவள் ஒவ்வொரு முறையும் முதலில் கண்ணிமைத்து விட்டு தன் தோல்வியை ஒப்புக்கொள்வாள்.
மீண்டும் மீண்டும் கூற முயற்சிப்பேன் "தயவு செய்து அந்த கண்களை இமைக்காதே, 
அந்த கருவிழி வட்டத்தில் நான் சிக்கித்தவிப்பதை ரசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று.

பாவம் அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நான் வெற்றி பெறுவது எதனாலென்று
அந்த கருவிழி அழகில் உறைந்துவிட்ட நான் வென்றேயாகவேண்டும் போட்டியையும் அவள் மனதையும் !!