09 மார்ச், 2011

வாருங்கள் வாக்களிப்போம்

வெள்ளையரை விரட்டியடித்து கொள்ளையரிடம் நாட்டை ஒப்படைத்தோம்,
சுதந்திர போர்க்களத்தில் வென்று, தந்திர போர்க்களத்தில் மாண்டு போகிறோம்,
உப்பு சத்தியாகிரகம் செய்ததாலோ என்னவோ, உப்பே சேர்க்காமல் உண்கிறோம்.
கொள்ளயனில் கொஞ்சம் நல்ல கொள்ளையன் எவன் என யோசித்து,
நம் தலையில் விழுந்த மண் போதாதென்று, நம் பிள்ளையர் தலையிலும்
மண் அள்ளிப்போட மற்றுமோர் துரோகிக்கு வாக்களிப்போம்.
கேட்டால், "வாக்களிப்பது என் ஜனநாயக உரிமை", என வீரமாய் கூறுவோம்.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்பது மறந்து போய்,
என்று தணியும் இந்த தந்திர காரர்களின் தாகம் என்றானது !!

-நாச்சு